ஃபெஞ்சல் புயல் எதிரொலி - ஏற்காடு பயணிகளுக்கு தடை விதித்த ஆட்சியர் !
ஏற்காடு
ஃபெஞ்சல் புயலால் எதிரொலியால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் 1235.8மிமீ மழைப்பதிவாகியுள்ளது.
ஏற்காட்டில் மட்டும் முதல் நாள் 144.4 மில்லி மீட்டர், இரண்டாவது நாள் ஞாயிற்றுக்கிழமை 238 மில்லி மீட்டர் என அடுத்தடுத்த இரு நாட்களில் மிக கனமழை பெய்தது.
இதனால், ஏற்காடு மலை கிராமங்களிலும், மலை பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள மண் சரிவு மற்றும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை பெய்து வருவதால் கடும் குளிரும், பனியும் நிலவி வருகின்றதால் ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகள் பயணத்தை தவிர்க்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
Next Story