ஜாலியாக டூர் போக வால்பாறை போங்க !

ஜாலியாக டூர் போக வால்பாறை போங்க !

 வால்பாறை

ஜாலியாக டூர் போக வேண்டும் என நினைப்பவர்களுக்கு சட்டென நினைவுக்கு வரும் இடங்களில் ஒன்று வால்பாறை. இயற்கை விரும்பிகளின் சொர்க்கம் ஏழாவது சொர்க்கம் என புகழப்படும் இடம் வால்பாறை .மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 அடி உயரத்தில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சி பகுதி வால்பாறை 1846 இல் ராமசாமி முதலியார் என்பவர் தான் வால்பாறையில் முதன் முதலில் காபியை பயிரிட்டவர் .வால்பாறை என்றதும் வளைந்து நெளிந்து செல்லும் கொண்டை ஊசி வளைவுகளும் ,பணி முடிய மலைகளும் , கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடக்கும் தேயிலை தோட்டங்களும், குளிருக்கு இதமான தேநீரும், கண்முன்னே இயற்கை எழில் கொஞ்சம் காட்சிகளாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தேயிலை தோட்டங்களையும், வனப் பகுதிகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது வால்பாறை. 1875-ல் இங்கிலாந்து இளவரசர் 7-ஆம் எட்வர்டு வால்பாறை அருகே புல் மலைக்கு வேட்டையாட வந்து பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் தங்கி உள்ளார். ஆனால் என்ன காரணத்தாலோ வேட்டையாட செல்லவில்லை. அதன் பின் பல்வேறு தரப்பினர் தேயிலைசெடிகளை பயிரிட தொடங்கினர் .அப்போது சுமார் 50-ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. மலைப்பாதையின் முதலில் ஆழியாறு அணை ,அதை யடுத்து குரங்குஅருவி, மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டது இந்த வால்பாறை. வால்பாறை சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக இருந்து வருகிறது.

Tags

Next Story