தனுஷ்கோடி வரலாறு
தனுஷ்கோடி
தனுஷ்கோடி தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக நகரம் சென்னை தூத்துக்குடிக்குப் பின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் விளங்கியது பிரிட்டிஷ் அரசு இந்தியாவையும் இலங்கையையும் ஒரு சேர ஆண்டு கொண்டிருந்த 18 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் கப்பல் போக்குவரத்து மூலம் வியாபாரமும் செழிப்பாக நடந்து கொண்டிருந்தது 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு தனுஷ்கோடியிலும் தலைமன்னாரிலும் ஒன்றுபோல் துறைமுக கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டி மூன்றே வருடங்களில் கப்பல் போக்குவரத்தையும் தொடங்கி விட்டார்கள்.இர்வின்,போஷின், என்ற பெயருடைய இந்த இரண்டு நீராவி கப்பல்களும் இந்த துறைமுகத்திலிருந்து தான் பயணத்தை தொடங்கின கப்பல் போக்குவரத்து நடைபெற்ற காலத்தில் ஒரு நாளைக்கு ஆறு ரயில்கள் தனுஷ்கோடி வரை சென்று வந்து கொண்டிருந்தன சென்னை எக்மோரில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு தொடரிகள் தனுஷ்கோடி வரை சென்று வந்தனர் இந்தோ- சிலோன் போட் மெயில் என்று அழைக்கப்பட்ட இந்த தொடரியின் சிறப்பம்சமே இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதுதான். எண்பது ரூபாய் கட்டணத்தில் டிக்கெட் எடுத்தால் சென்னையில் இருந்து கொழும்பு வரை சென்று விடலாம் .தனுஷ்கோடி கடலில் குளித்தால் காசி தீர்த்தத்தில் நீராடியதற்கு சமம் என்றொரு நம்பிக்கை உண்டு மேலும் காசியில் தொடங்கிய புனித யாத்திரை இராமேஸ்வரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையும் மக்களுக்கு உண்டு அதனால் வாரணாசியில் இருந்து தனுஷ்கோடிக்கு வாரம் இருமுறை தொடரிகள் வந்து செல்லும். மேலும் பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு பயணிகள் தொடரியும் உண்டு. பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்ல முதலில் ராமேஸ்வரம் வழியாக தான் தொடரி பாதையை அமைத்திருந்தனர் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதை இந்திய பெருங்கடலில் கடற்கரையோரம் அமைந்திருந்தது சாதாரணமாகவே இந்திய பெருங்கடலில் காற்றின் வேகம் மிக அதிகம். இந்த காற்றானது அடிக்கடி தொடரியின் வழித்தடத்தை கடல் மணல் கொண்டு மூடி விடுவதால் அடிக்கடி தொடரி போக்குவரத்து தடைபடுவது உண்டு இதற்கு மாற்று ஏற்பாடாக பாம்பனில் இருந்து தனுஷ்கோடி செல்லும் தொடரி பாதையைகுந்துகல்என்ற இடம் வழியாக மாற்றியமைத்தார்கள் மேலும் குந்துகல்லில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்கு இணைப்பு தொடரி உண்டு. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி இரவு ஏற்பட்ட பயங்கர புயலால் தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்தது ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக இருந்தனர் ஆனால் அந்த புயலிலும் பாம்பன் தொடரி பாலத்திற்கு பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை இதனால் தனுஷ்கோடி வரையிலான தொடரி போக்குவரத்தும் அங்கிருந்து தலைமன்னார் சென்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது .அந்த புயலினால் பாலத்திற்கு ஏற்பட்ட சிறிதளவு சேதங்களை சரி செய்ய ஓராண்டு ஆனது. பாம்பன் தொடரி பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் மீட்டர் கேஜ் பாதையாகவே இருந்தது.