கலிஃபோர்னியா சொர்க்கபூமியில் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி பார்க்க எண்ணற்ற இடங்கள் !!

கலிஃபோர்னியா சொர்க்கபூமியில் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி பார்க்க எண்ணற்ற இடங்கள் !!

 கலிஃபோர்னியா 

சான் பிரான்சிஸ்கோ பே :


அமெரிக்காவின் அழகிய நகரங்களில் ஒன்று சான் பிரான்சிஸ்கோ . கடலும் மலைகளும் சந்தித்துக்கொள்ளும் பேரழகான இடம். இந்த நகரத்தில் சான் பிரான்சிஸ்கோ பே என்னும் கடற்பகுதி உள்ளது. இந்த கடற்பகுதியில் மேல் கட்டப்பட்டுள்ள கோல்டன் கேட் பாலம் உலகப்புகழ் வாய்ந்த ஒரு பாலம் ஆகும். எண்ணற்ற ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த பாலத்தை காட்டியிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.முழுக்க முழுக்க இரும்பினால் உருவாக்கப்பட்டு, ஆரஞ்சு நிறத்தில் வண்ணமடிக்கப்பட்ட இந்த பாலத்தை தூரத்தில் நின்று ரசித்தாலும் சரி, அருகில் நின்று ரசித்தாலும் சரி. உங்களை பரவசத்தில் ஆழ்த்திவிடும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இந்த பாலத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கும் இடம் தான் அல்கட்ராசு (Alcatraz) தீவு. முன்னர் சிறைச்சாலையாக இருந்த இந்த தீவு, பிற்காலத்தில் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

யோசெமிட்டி :


உயரமான மலைகள், தாழ்வான பள்ளத்தாக்குகள்,ஆறுகள்,அருவிகள் என பார்ப்போர் மனதை மயக்கும் வண்ணம் இயற்கை அன்னையின் மொத்த அழகையும் ஒருசேர அமையப்பெற்ற இடம் தான் Yosemite தேசிய பூங்கா. இங்கு மலையேற்றம், மிதிவண்டி பயணம் மற்றும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களால் சூழப்பட்ட அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதி, உங்கள் நினைவை விட்டு நீங்கவே நீங்காது.

செக்வோயா தேசிய பூங்கா :


வானுயர வளர்ந்து நிற்கும் மரங்கள். பார்ப்பதற்கே பயத்தையும் ஆச்சர்யத்தையும் கலந்த உணர்வை தரும். உலகின் மிகப்பெரிய மரங்கள் இந்த தேசிய பூங்காவில் தான் உள்ளன. அவற்றுள் சில மரங்களின் வயது 3000 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்கிறார்கள்.இந்த அடர் காட்டுக்கு நடுவில் அமெரிக்காவின் மிக உயரமான மலைகளில் ஒன்றான Mt.Whitney மலை அமைந்துள்ளது. இந்த மலையின் உயரம் 14,495 அடி.

கிளாஸ் பீச் :


நீங்கள் கலிஃபோர்னியாவில் இருக்கும்போது, ​​ஃபோர்ட் பிராக் அருகே உள்ள கண்ணாடி கடற்கரைக்குச் செல்ல நேரம் ஒதுக்காமல் இருக்கும்போது, ​​உண்மையிலேயே சுவாரஸ்யமான ஒன்றை நீங்கள் இழக்க நேரிடும்.

இதற்குப் புதியவர்களுக்கு, கலிபோர்னியாவில், குறிப்பாக ஃபோர்ட் பிராக் பகுதியில் நீங்கள் காணக்கூடிய தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் கிளாஸ் பீச் ஒன்றாகும். இந்த கடற்கரை மிகவும் விரும்பப்படும் கடற்கரைகளில் ஒன்றாகும், ஏனெனில் இது வண்ணமயமான, மென்மையான கண்ணாடி கூழாங்கல்களால் மூடப்பட்டிருக்கும். இங்கே, மணல் கரைகளுக்குப் பதிலாக, கண்ணாடி கூழாங்கற்களைக் காணலாம்.கிளாஸ் பீச் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி மற்றும் மேக்கெரிச்சர் மாநில பூங்காவின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கடற்கரைக்கு வந்து தனித்துவமான அழகை ரசிக்கிறார்கள்.

லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியகம் :


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அமைந்துள்ள அற்புதமான இடம். அமெரிக்க நாட்டில் உள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகங்களுள் முதன்மையானது இந்த இடம். 1900 காலகட்டம் முதல் வரையப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களை தனக்குள் கொண்டிருக்கிறது இந்த அருங்காட்சியகம். இவ்வளவு அழகான இடங்களை கொண்ட கலிஃபோர்னியாவை வாழ்வில் ஒரு முறையேனும் சுற்றி பார்த்து விட வேண்டும்.

Tags

Next Story