சுற்றுலா போக பிளானா - ஜவ்வாது மலைக்கு போங்க !!!
ஜவ்வாது மலை
கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். 200 மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன.
பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன.
சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர்.
தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. குள்ள மனிதர்கள் என்று அழைக்கப்படும் வாளியர்கள் வாழ்ந்த வாளியம்பாறைஇங்கே நீங்கள் காணலாம்
பீமன் அருவி, படகு குழாம், பூங்கா, கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.