சேலத்தில் மேட்டூர் அணை !

சேலத்தில் மேட்டூர் அணை !

மேட்டூர் அணை 

மேட்டூர் அணை சேலத்திலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் இவ்வூர் உள்ளது இந்த ஊரில் காவிரியின் குறுக்கே அணை கட்டி தஞ்சை திருச்சி மாவட்ட நிலங்களுக்கு பாசன வசதி செய்வதற்காக நீர்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும் அப்போது சென்னை மாகாண ஆளுநரான சர் ஜார்ஜ் ஸ்டேன்லி பதவி வகித்தார் அதன் காரணமாகவே ஸ்டேன்லி நீர் தேக்கம் என்று அழைக்கப்படுகிறது. மேட்டூர் அணையினை கட்டிய கர்னல் டபிள்யூ எம் எல்லீஸ் அவர்கள் மேட்டூர் அணையினை வடிவமைத்து கொடுத்ததை பெருமைப்படுத்தும் வகையில் இவர் ராயல் பொறியாளர் என்று அழைக்கப்பட்டார். இவருடைய திருவுருவச்சிலை மேட்டூர் அணையின் 16 கண் மதகு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இவரது பெயரை நினைவு கூறும் வகையில் இயற்கையான நீர் வழிந்தோடியாக உள்ள 16 கண் மதகு பாலத்திற்கு எல்லீஸ்சேடல் என்ற பெயரும் உண்டு மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இதுதான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும் அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும் காவிரி ஆறு ஆனது கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4,400 அடி உயரத்தில் கூர்க் மலை பகுதியில் உள்ள மெர்க்காரா என்ற இடத்தில் தோன்றி கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் வழியாக சுமார் 860 கிலோமீட்டர் பாய்ந்தோடி வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது மேட்டூர் அணையின் மூலம் சேலம் நாமக்கல் ஈரோடு திருச்சி கரூர் அரியலூர் பெரம்பலூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் ஆகிய 12 மாவட்ட பகுதிகளில் உள்ள சுமார் 16.04 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது மேட்டூர் அணையில் உள்ள இரண்டு நீர் மின் நிலையங்கள் முதலாவது பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்திய குடியரசிலும் கட்டப்பட்டன மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும் போது அந்நீரை பயன்படுத்தி 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Tags

Read MoreRead Less
Next Story