குரங்கு அருவி(MONKEY FALLS)

குரங்கு அருவி(MONKEY FALLS)

குரங்கு அருவி

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் உள்ளது இந்த குரங்கு அருவி. அருவி அருகில் உள்ள சுவர்களில் புள்ளிமான்களின் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி ,தண்ணீர் விழும் பகுதியில் கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கு அருவிக்கு வனத்துறையினர் "கவியருவி" என பெயர் மாற்றம் செய்துள்ளனர். குரங்குகளின் சிற்பங்களை வடிவமைத்து அதில் ஐங்குறுநூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் குரங்குகள் குறித்து பாடப்பட்டுள்ளதை கல்வெட்டுகளாக வடித்துள்ளனர். குரங்குகளுக்கு சங்க இலக்கியத்தில் பல பெயர்கள் உள்ளன. அதில் கவி என்ற பெயரை தேர்வு செய்து குரங்கு அருவிக்கு 'கவியருவி' என பெயரிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் 'ஆரோக்கியராஜ் சேவியர்' தெரிவித்துள்ளார். இங்கு குரங்குகள் அதிகம் இருக்கும் .கோவை மாவட்டம் டாப்ஸ்லிப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் யானை சவாரி நடைபெற்று வருகிறது. இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வந்து செல்கின்றனர்.

Tags

Next Story