தென்னகத்தின் நயாகரா - ஒகேனக்கல் !
ஒகேனக்கல்
தென்னகத்தின் நயாகரா என்று அழைக்கப்படும் ஒகேனக்கல் இம்மாவட்டத்தில் உள்ள தலைசிறந்த சுற்றுலாத்தலமாகும். தர்மபுரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தோப்பூர் மலைத்தொடரில் 780 அடி கடல் மட்டத்திற்கு மேல் உள்ள பகுதியில் சந்திக்கிறது.
பின்னர் இரண்டாக பிரியும் காவிரி 86 அடி ஆழத்தில் ஒரு பள்ளத்தில் விழும் இடம் தான் ஒகேனக்கல். இங்கு காவிரி 36 பிரிவுகளாக பிரிந்து அருவியாக விழும் அழகை காண்பது மனதிற்கு பெரும் மகிழ்ச்சியை தரும். கல்லில் விழும் நீர் துளி புகை போல் எழும்பும்போது அது கல்லில் இருந்து வருவது போல் இருப்பதால் அந்த கல்புகையை உண்டாக்கும் கல் என்ற பொருளை "புகை கல்"அதாவது ஒகேனக்கல் என்று அழைக்கப்படுகிறது.
இது மகிழ்ச்சியும் மற்றும் புத்துணர்ச்சியும் உங்களுக்குள் புகுத்தக்கூடிய அற்புதமான இடம் காவிரி ஆறு தமிழ்நாட்டிற்குள் நுழையும் இடத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி இந்த இடம் மிகவும் பிரபலமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாகும் இந்த நீர்வீழ்ச்சி.