ஊட்டியின் கோடை விழா! டூர் போக ரெடியா?

ஊட்டியின் கோடை விழா! டூர் போக ரெடியா?

கோடை விழா

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். மலர்கண்காட்சியை யொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் ,மே மாதங்களில் கோடை சீசன் நிலவும். இந்த சீசனை அனுபவிக்க தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமா நிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறைச் சார்பில் மே மாதம் முழுவதும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்நிலையில் தற்போது மலர்கண்காட்சி மே 10-ம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். கண்ணுக்கு விருந்தளிக்கும் இந்த மலர் கண்காட்சிகளை குழந்தைகளுடன் சென்று கோடை விடுமுறையில்கண்டு களிக்கலாம்.

Tags

Read MoreRead Less
Next Story