கொடைக்கானலில் துவங்கியுள்ள சீசன்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் துவங்கியுள்ள சீசன்: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கடும் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலில் துவங்கியுள்ள சீசனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம், இந்நிலையில் சீசன் துவங்கியதை தொடர்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்தும், தரைப்பகுதிகளில் நிலவும் வெப்பத்தை சமாளிக்கவும் சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது.

இதனையடுத்து நகர்ப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பாக ஏரிச்சாலை,கலையரங்கம், மூஞ்சிக்கல், கல்லறை மேடு,அப்சர்வேட்டரி, சென்பகணூர் உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக 100க்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்தப்படி பயணம் மேற்கொண்டு வருகின்றன.

இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி விரைவில் மாற்று சாலை அமைக்க வேண்டும் எனவும் விடுமுறை நாட்களில் கூடுதல் போக்கு வரத்து காவலர்களை பணியில் அமர்த்தி போக்கு வரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story