கொல்லிமலையின் சிறப்புகள் !
கொல்லிமலை
கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது.
இயற்கை வளம் மிக்க கொல்லிமலை இந்தியாவின் தெற்கு பகுதியில், தமிழ்நாட்டின் நடுப்பகுதியில், நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் ஆகும்.
கொடிய நோய்களை கொல்லும் அற்புத மூலிகைகளையும் கொண்டு விளங்குகிறது கொல்லிமலை.
நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உடையது.
இம்மலை வடக்கு தெற்காக 28 கி.மீ பரப்பளவு கிழக்கு மேற்காக 19 கி.மீ பரப்பளவு மொத்தத்தில் 4414 சதுர கி.மீ பரப்பளவு கொண்டுள்ளது.
மலைப்பாதையின் தூரம் 26 கி.மீ செங்குத்தான இம்மலைப் பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது.
இம்மலைக், காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக இம்மலை பிரதேசத்துக்கு கொல்லிமலை என்ற பெயர் வந்தது.
வரலாற்று சிறப்புமிக்க அரப்பளீஸ்வரர் கோவிலின் அருகில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி உள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியில் குளித்தால் பல்வேறு நோய்கள் தீருவதுடன் உடல் ஆரோக்கியம் அடைகிறது.
அவ்வையார் முதல் 18 சித்தர்கள் இம்மலையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது.