சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புகள்!

சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புகள்!

சிவகங்கை 

கலை நேர்த்தியும் கம்பீரமும் கொண்ட அரண்மனைகளைப் போன்ற செட்டிநாடு வீடுகளும் ருசியான செட்டிநாடு உணவு வகைகளும் பதார்த்தங்களும் ஆன்மீக மனம் கமழும் பழமையான திருக்கோயில்களும் சிவகங்கையை உலகப் புகழ் பெற வைத்திருக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் கோயிலில் இருந்தபடி தான் வைணவ புரட்சி துறவி ராமானுஜர் "திருமந்திரத்தை "அனைத்து மக்களுக்கும் உபதேசம் செய்தார் .சங்க இலக்கியத்தால் புகழப்படும் பாரி வள்ளல் ஆட்சி செய்ததாக கூறப்படும் பிரான் மலையும், 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரும் இந்த மாவட்டத்திற்கு மேலும் புகழை சேர்க்கின்றன. கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் இறுதி காலத்தில் இங்கு வந்து வாழ்ந்ததால் சிவகங்கை மாவட்டத்தில் இன்றளவும் தமிழ் மணப்பதை இங்கு தோன்றிய தமிழறிஞர்களின் பட்டியலை கொண்டு அறிந்து கொள்ள முடிகிறது. வேலு நாச்சியாரின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்து நாட்டிற்காக இன்னுயிர் நீத்த மருது சகோதரர்களின் தியாகத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது . சோழ நாட்டில் இருந்து குடி பெயர்ந்து வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கு ஆதரவளித்த நாட்டரசன் கோட்டையும் நகரத்தார்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து வெளியேறி இங்கு வந்தபோது அவர்களுக்கு பாண்டிய மன்னரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இழையாத்தங்குடி என்ற ஊரும், சோழநாடு தருமபுரம் ஆதீன இளவரசராக இங்கு வந்து மகா சந்நிதானமாக விளங்கிய குன்றக்குடி அடிகளாரின் பெயரோடு இணைந்து விட்ட குன்றக்குடியும் சிவகங்கை க்கு கூடுதல் பெருமையை சேர்க்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையில் பொறிக்கப்பட்டிருக்கும் "யாதும் ஊரே யாவரும் கேளிர் "என்று உலகளாவிய தத்துவ மொழிக்கு சொந்தக்காரராக விளங்கும் கணியன் பூங்குன்றனார் இங்குள்ள மகிபாலன் பட்டியில் பிறந்தவர் .காரைக்குடி செட்டிநாட்டு அரண்மனைகள் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் போன்ற சுற்றுலா தலங்களையும் உள்ளடக்கியது சிவகங்கை மாவட்டம்

கண்ணாத்தாள் கோயில் மருதுபாண்டியர் திருப்பணி செய்த காளையார் கோயிலில் மூன்று சிவன் கோயில்கள் அடுத்தடுத்த அமைந்துள்ளது இவ்வூரின் சிறப்பாகும். வைகாசியில் பிரமோற்சவ திருவிழாவும் தை மாதத்தில் காளிசுரருக்கு திருவிழாவும் ஆடி மாதத்தில் பூரம் திருவிழாவும் மற்றும் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பிள்ளையார்பட்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றான கற்பக விநாயகர் கோயில் பிள்ளையார்பட்டியிலுள்ளது. தலையில் சடையுடன் யோகநிலையில் காணப்படும் விநாயகர் இறையுருவில் வயிறு குறைவாக மெலிந்துள்ளது .வலக்கையில் சிவலிங்கத்துடன் வலம்புரி விநாயகர் காட்சி தருகிறார்.. மாத சதுர்த்திகளிலும் ஆவணியின் வளர்பிறை சதுர்த்தியுடன் முடியும் 10 நாள்களிலும் விழாக்கள் நிகழ்கின்றன இவ் ஊரின் பழைய பெயர் ஏருக்காட்டூர.

பெருமாள் கோயில் வைணவ கோயிலான திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில் திருப்பத்தூருக்கு எட்டு கிலோமீட்டர் தென்மேற்கே உள்ள இந்த ஊர் தமிழ்நாட்டில் உள்ள மிகப் பிரபலமான வைணவ தலங்களில் ஒன்றாகும்

குன்றக்குடி முருகன் கோயில் தமிழகமெங்கும் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றான குன்றக்குடி முருகன் கோயில் காரைக்குடியில் இருந்து 9-கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மலையின் அமைப்பு மயில் போன்றுள்ளது.மலை மீது முருகன் கோயிலும் மலையின் கீழ் சிவன் கோயிலும் தோகை போன்று வடிவமைப்பு உள்ள இடத்தில் தோகையடி விநாயகர் கோயிலும் அமைக்கப்பட்டுள்ளன .

காளையார் கோயில் அப்பர் ,சேக்கிழார் ,அருணகிரியார், குமரகுருபரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமும் மாணிக்கவாசகர் வருகை புரிந்ததுமான இந்த காளையார் கோயில் மதுரையிலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

காரைக்குடி

காரைச் செடிகள் பெருகி இருந்ததால் இவ்வூர் காரைக்குடி என்னும் பெயர் பெற்றது. நகரத்தார் என்று கூறப்படும் செட்டியார்கள் வாழும் செட்டிநாட்டு பகுதியில் தலைநகரம் போல் விளங்குவது இந்த காரைக்குடி நகரத்தாரின் ஒவ்வொருவரின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாளிகை மதில் போன்ற சுற்றுச்சுவர்களும் பளிங்கு தரையும், கதை ஓவியங்களும் வண்ண சித்திரக் கண்ணாடி சாளரங்கள், அலங்கார தொங்கு விளக்குகள் ,அழகான தேக்கு மர வேலைப்பாடுகள் இப்படியாக இன்றும் கலைநயத்தோடும் மிளிரகின்றன. இவர்களின் வீடுகளில் விருந்தோம்பல் பண்பில் சிறந்த இவர்கள் கடல் கொண்ட பூம்புகாரை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

நாட்டரசன் கோட்டை இது கவிச்சக்கரவர்த்தி கம்பன் சமாதி உள்ள ஊராகும். கம்பர் இங்கு தான் உயிர் துறந்தார் என்பார் இங்கு ஆண்டுதோறும் கம்பர் விழா எடுக்கப்படுகிறது . கம்பர் குளம், கம்பர் ஊரணி, கம்பர் செய் கம்பர் நடுகல் முதலியனவும் உள்ளன. இதற்குகளவழி நாடு என்ற பெயரும் இருந்தது. கண்ணகிக்கு கோயில் உள்ளது இந்த ஊர் திருவிழாக்களில் கள்ளர் வகுப்பினருக்கு "நாட்டரசன்" என்ற பட்டம் கூறி திருநீறு வழங்கப்படுகிறது.

Tags

Next Story