ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரம்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஒகேனக்கல் பகுதியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலும் மற்றும் மாநிலங்களிலிருந்தும் தினமும் வந்து வழக்கம். தற்போது கோடை காலம் தொடங்கி நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க துவங்கியது நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர. மேலும் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடன் பாதுகாப்பு உடைகள் அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்றனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள் ஹோட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வருவல் கடைகளில் விற்பனை ஜோராக நடைபெற்றது கோடை வெயில் கொளுத்தியதால் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியோவற்றை சுற்றுலாப் பணிகள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ஒகேனக்கல் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story