சிங்கப்பூர் - க்கு சுற்றுலா போறிங்களா ? அப்போ இந்த 5 இடத்தை மிஸ் பண்ணிறாதிங்க !!!

சிங்கப்பூர் - க்கு சுற்றுலா போறிங்களா ? அப்போ இந்த 5 இடத்தை மிஸ் பண்ணிறாதிங்க !!!

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஃப்ளையர் :


சிங்கப்பூர் ஃப்ளையர் ஒரு மாபெரும் ராட்டினம் ஆகும். இது 2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்டபோது, இதுவே உலகின் மிக உயரமான பெர்ரிஸ் சக்கரமாக விளங்கியது. வண்ணமயமான கண்களைக் கவரும் மின்விளக்குகள் பொருத்திய இந்த ஃப்ளையரானது நகரத்திற்கு மேலே வட்டமிடும்போது சுமார் 28 பேர் வரை இதில் அமர்ந்து ரசிக்கலாம். இந்த சிங்கப்பூர் ஃப்ளையரில் ஏறி நீங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் பார்க்கலாம். மேலும் இது உலகின் மிகப்பெரிய ராட்சத கண்காணிப்பு சக்கரம் என்றும் அறியப்படுகிறது.

நைட் சஃபாரி:


சிங்கப்பூரின் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நைட் சஃபாரி 1984 இல் மாண்டாய் நகரில் திறக்கப்பட்டது. இதுதான் உலகின் முதலாவது இரவு நேர உயிரியல் பூங்காவாகும். மேலும் இது ரிவர் வொண்டர்ஸ் , சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை, பறவை சொர்க்கம் மற்றும் மழைக்காடு காட்டு ஆகியவற்றுடன் மண்டாய் வனவிலங்கு காப்பகத்தின் ஒரு பகுதியாகும். அதோடு இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகும்.

மெரையின் ஃபிஷரிஸ்:


கடல்வாழ் உயிரினங்களின் உலகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்களுக்கு சிங்கப்பூரின் இந்த ‘மெரையின் ஃபிஷரிஸ்’ என்ற இடமானது நிச்சயமாக சிறந்த அனுபவத்தை தரும். இங்கு மீன்வளத்தில் சுமார் 1,00,000 க்கும் மேற்பட்ட கடல் இனங்கள் உள்ளன.

செந்தோசா:


செந்தோசா சிங்கப்பூரில் உள்ள மிகவும் பிரபலமான தீவாகும். சுற்றுலாவின் சிறந்த அனுபவத்தை அளிக்கும் இந்த இடத்தை நோக்கி, ஆண்டொன்றுக்கு சுமார் இருபது மில்லியன் அளவிலான மக்கள் படையெடுத்து வருகின்றனர். 2 km நீளமுடைய கடற்கரை, சிலோசோ கோட்டை, இரண்டு குழிப்பந்தாட்ட மைதானங்கள், மெர்லயன் சிலை, 14 தங்கும் விடுதிகள், மற்றும் யூனிவர்சல் ஸ்டூடியோஸ் உள்ளிட்டவை அடங்கிய தனி உலகமாக இந்த செந்தோசா தீவு அமைந்து எண்ணிலடங்கா சுற்றுலாப் பயணிகளை தன்வசம் கவர்ந்திழுக்கிறது.

சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா:


சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா என்பது மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். அதோடு இது அதிகளவிலான மக்களால் பார்வையிடப்பட்ட பகுதியாகவும் கருதப்படுகிறது. இந்த தோட்டத்தில் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட தாவரவகைகள் உள்ளன.

Tags

Next Story