உலகம்மை காசி விஸ்வநாதர் கோயில் !

உலகம்மை காசி விஸ்வநாதர் கோயில் !

உலகம்மை காசி விஸ்வநாதர் 

தென்காசியில் உள்ள உலகம்மை காசி விஸ்வநாதர் கோயில் தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த பராக்கிரமபாண்டியன் என்ற மாமன்னன் கண்ட கனவினால் இக்கோயில் தோன்றியது. தென்காசி சிற்றாறு நதிக்கரையில் நெற்களஞ்சியம் சூழ அமைந்த அழகிய நகரம். இந்த தென்காசியில் சிவத்தலங்களில் சிறப்புமிக்க உலகம்மை-காசி விஸ்வநாதர் சுவாமி கோயில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.


மன்னன் கனவில் விஸ்வநாதரே வந்து காசியில் உள்ள கோயில் சிதைவுற்று இருப்பதாக சொல்ல, மன்னன் இக்கோவிலை கட்டினான் என்பது வரலாறு. தென்காசி நகருக்கே அணிகலனாய் விளங்கிய திருக்கோவிலின் ராஜகோபுரம், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்பட்ட தீக்கோளினால் சிதைந்து கல் காரத்திற்கு மேல் உள்ள கோபுரம் இரண்டாகப் பிளந்து விட்டது . கோயிலை கட்டிய பராக்கிரம பாண்டியன் கோயில் குடமுழுக்கு விழா நடத்திய போது ஒரு பாடலைப் பாடி அதனை கல்வெட்டாக அங்கு பதிந்துள்ளார் ."இந்த ஆலயம் காலத்தால் சிதைவு அடையுமானால் அந்த சிதைவுகளை அகற்றி செப்பம் செய்பவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன்" என்று அப்பாடலில் பராக்கிரம பாண்டியன் குறிப்பிட்டுள்ளார். அப்படி இருந்தும் களை இழந்து நின்ற ராஜகோபுரத்தை புதுப்பித்து கட்ட யாராலும் முடியவில்லை.


பலமுறை திருப்பணி குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் முயற்சி ஈடேறவில்லை. 18 ஆண்டுகாலம் கழித்து 1981 ஆம் ஆண்டு ராஜகோபுரத்தை கட்டுவதற்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் அமைந்த தமிழக அரசு முயற்சி எடுத்தது. கோயிலின் திருப்பணி குழு தலைவராக சிவந்தி ஆதித்தன் பொறுப்பேற்றார். 26. 11. 1984 .அன்று ராஜகோபுர பணியை தொடங்கினார். இந்த ராஜகோபுரத்தின் உச்சியில் 11 கலசங்கள் எழிலுற காட்சி தருகின்றன. கோபுரத்தின் மீது ஏறி தென்காசி அருவியையும், சுற்றுப்புற சூழலையும் கண்டு களிக்க ஒன்பதாவது நிலையில் வசதி செய்யப்பட்டுள்ளது .தென்காசியில் உள்ள உலகம்மை- காசி விஸ்வநாதர் கோயில் வரலாறு சிறப்பு மிக்கதாக உள்ளது.

Tags

Next Story