பகிர் கொலை சம்பவங்களுடன் 2024 தேர்தல்.. 38 வேட்பாளர்கள் படுகொலை.. !
மெக்சிகோ தேர்தல்
மேற்கு மெக்சிகோவில் நேற்று (2 ஜூன்) வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுத் தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
35 வயதான இஸ்ரேல் டெல்கடோ வேகா, குயிட்சியோ நகரத்தைச் சேர்ந்த வேட்பாளர். அவர் வீட்டின் வெளியில் இருந்த போது பைக்கில் இருவர் அவரைச் சுட்டுக் கொன்றதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.
மெக்சிகோவில் இதுவரை இல்லாத ஆகப்பெரிய தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
இம்முறை குலோடியா ஷேன்போம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பைப் பெற்று அதிபர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story