கடந்த 10 வருடங்களில் ரோபோக்களின் பங்கு 65% உயர்வு!
இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் ரோபோடிக்ஸ்
கடந்த 10 வருடங்களில் உற்பத்தித் துறையில் ரோபோக்களின் பங்கு குறித்து இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆப் ரோபோடிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள வோல்ட் ரோபோடிக்ஸ் 2023 ஆய்வறிக்கையில் உலகளவில் 2022ம் ஆண்டு வரை 3.9 மில்லியன் ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
உலகளவில் எந்தெந்த நாடுகளில் 10,000 தொழிலாளர்களுக்கு எத்தனை ரோபோக்கள் நிறுவப்பட்டுள்ளது என்ற விவரம் பின்வருமாறு,
தென் கொரியா - 1,012, சிங்கப்பூரில் - 730, ஜெர்மனி - 415, ஜப்பான் - 397, சீனா - 392
உலகளவில் 10,000 தொழிலாளர்களுக்கு நிறுவப்பட்டுள்ள ரோபோக்களின் சராசரி 2013ல் 53 ஆக இருந்ததும், அது 2022ல் 151 ஆக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தற்போதைய சூழலில் உலகளவில் AI போன்ற தொழில்நுட்பங்களால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அச்சம் நிலவும் சூழலில் இந்த ஆய்வறிக்கை மேலும் அதை உறுதிபடுத்துவாக உள்ளது.