ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில்  7.6  ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்ட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள ஹாராவில் நேற்று மாலை 4.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் ஹரா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தது. இதனால், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மேலும் எண்ணற்றோர் காயமடைந்து இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

ரிங்க் ஆப் பயர் எனப்படும் புவி தட்டுக்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் பகுதியில் ஜப்பான் இருப்பதால் அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக கருதப்படுகிறது.

Tags

Next Story