பாகிஸ்தானில் கடும் துப்பாக்கிச்சண்டை: 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; 8 வீரர்கள் உயிரிழப்பு!!
Gun Fight
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் நேற்றிரவு பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டபோது இந்த சண்டை நடைபற்றது. இதில் லஷ்கர்-இ-இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய கமாண்டர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சண்டை கைபர் மாவட்டத்தில் உள்ள திராஹ் பள்ளத்தாக்கில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 6 பேர் காயம் அடைந்தனர். பாதுகாப்புப்படையினர் 8 பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சண்டை பல மணி நேரம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சண்டையில் அருகில் இருந்து வீடுகளில் வசித்த பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர்.