ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் அபராதத்துடன் விடுதலை: இலங்கை நீதிமன்றம்

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் அபராதத்துடன் விடுதலை: இலங்கை நீதிமன்றம்
X

fishermen

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 26-ந்தேதி கடலுக்கு சென்ற மீனவர்கள் 34 பேரை எல்லைதாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 2 முறை இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி வந்ததாக 15-க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுதலை நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று கடந்த 26-ந் தேதி கைதான மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி 34 மீனவர்களில் 19 பேரை மட்டும் விடுதலை செய்தார். இதில் படகு உரிமையாளர்கள், 2 படகு ஓட்டுனர்கள் என 3 பேரும் இலங்கை பண மதிப்பில் தலா ரூ.60.50 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மீதமுள்ள 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாகவும், அதனை செலுத்த தவறினால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். விடுதலை செய்யப்படாத மீதமுள்ள 15 மீனவர்களின் படகு விபரங்களின் முரண்பாடு உள்ளதால் இந்த வழக்கை வருகிற 10-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

Tags

Next Story