சீன அதிபருக்கு செர்பியாவில் உற்சாக வரவேற்பு !

சீன அதிபருக்கு செர்பியாவில் உற்சாக வரவேற்பு !

சீன அதிபர் ஷி ஜின்பிங் 

கடந்த 5 ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு செர்பியா வந்தடைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவருக்கு, பெல்கிரேட் நிகோலா டெஸ்லா விமான நிலையத்தில் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் மற்றும் உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங், செர்பிய பயணத்தை முடித்துக் கொண்டு, ஹங்கேரி செல்ல உள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story