சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் ஜாய் ஆலுக்காஸ் சுயசரிதை நூல் வெளியீடு : நடிகை கஜோல் பங்கேற்பு

சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில்  ஜாய் ஆலுக்காஸ் சுயசரிதை நூல் வெளியீடு : நடிகை கஜோல் பங்கேற்பு

ஜாய் ஆலுக்காஸ் சுயசரிதை நூல்

உலகில் பிரபலமான ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காசின் சுய சரிதை 'ஸ்பெரட்டிங் ஜாய்' என்ற ஆங்கில தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் சார்ஜாவில் நடந்து வரும் 42 வது சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

இதில் அவர் எப்படி உலகில் விரும்பப்படும் நகைக்கடை நிறுவனத்தின் தொழிலதிபரானார்? என்பது குறித்து அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.

ஆங்கில மொழியில் வெளியிடப்படும் இந்த நூலின் அரபி மற்றும் மலையாள மொழிபெயர்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனை புத்தகத்தை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் விளம்பர தூதரும், நடிகையுமான கஜோல் தேவ்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் ஜாய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜாய் ஆலுக்காஸ், அவரது மனைவி ஜாலி ஜாய் ஆலுக்காஸ், சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அகமது பின் ரக்காட் அல் அமெரி மற்றும் ஹார்பர்காலின்ஸ் புத்தக பதிப்பகத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நூல் வெளியீட்டு விழாவில் பிரபல வர்த்தக பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றினர்.

Tags

Next Story