பிரேசில் கனமழையின் காரணமாக வெள்ளபெருக்கு !! லட்சக்கணக்கான வீடுகள் சேதம்...
பிரேசில்
தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தெற்கு பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
ஐந்து மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் இந்த வெல்ல பேருக்கில் சுமார் ஒரு லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளது.
இதனால் வெள்ளப்பெருக்கு மற்றும் கட்டிட இடுப்பாடுகளில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டன. இந்த வெள்ளப் பெருக்கால் சுமார் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் தங்குவதற்காக பல தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் நீக்கப்பட்ட அங்கு தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
மேலும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் குடிநீர் வசதி, மின்சாரம், இணையம், தொலைதொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் 904 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.