பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தது இந்தோனேசியா: பிரேசில்

பிரிக்ஸ் அமைப்பில் இணைந்தது இந்தோனேசியா: பிரேசில்

brics - indonesia

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்ததாக பிரேசில் அறிவித்துள்ளது.

பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்ததாக பிரேசில் அறிவித்து இருக்கிறது. தெற்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருக்கிறது. இது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கியதாக தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது. கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தன.

Tags

Next Story