சீனாவில் மாணவர்களுக்கு பள்ளிகளில் கட்டாய உடற்பயிற்சி!!
china students
சீனாவில் மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீன அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இளம் தலைமுறையினருக்கு இன்றைய காலக்கட்டத்தில் கண் பாதிப்பு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன்படி மாணவர்கள் தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கட்டாயம் பங்கு பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு வகுப்புக்கு பின்னரும் விடப்படும் இடைவெளி சமீபத்தில் 15 நிமிடமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் உடல்நலம் மேம்படும் என சீன கல்வித்துறை துணை மந்திரி வாங் ஜியாயி தெரிவித்துள்ளார்.
Next Story