மண்ணில் புதைய போகிறதா சீனா!
சீனா
சீனாவில் உள்ள பல நகரங்கள் படிப்படியாகப் பூமியில் புதைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
சீனாவில் உள்ள 82 நகரங்களில் இது தொடர்பாக அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட சீன ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்துள்ளனர்.
அதில் சுமார் 45% நகரங்கள் ஆண்டுக்கு 0.1 இன்ச் என்ற ரேஞ்சில் மண்ணில் புதைகிறதாம். சில நகரங்கள் ஆண்டுக்கு 0.4 இன்ச் என்ற வேகத்திலும் மண்ணில் புதைவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த வேகத்தில் நகரங்கள் மண்ணில் புதைவது பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக நகரில் இருக்கும் உள்கட்டமைப்பை இது கடுமையாகப் பாதிக்கும். இதனால் தாழ்வான கடலோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் மோசமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை ஆங்கிலத்தில் land subsidence என்று அழைக்கிறார்கள். சீனாவின் முக்கிய நகரங்களில் கிட்டத்தட்டப் பாதி நகரங்களில் இந்த பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது.