காக்டெய்ல் ஜுஸ்! எனர்ஜெடிக் ஜூஸ்!
காக்டெய்ல் ஜுஸ்
காக்டெய்ல் ஜுஸ் எனர்ஜெடிக் ஜூஸ்
ஐந்து நபர்களுக்கு தேவையான பொருட்கள்
200 கிராம் ஆப்பிள்
அன்னாசி 200 கிராம்
காரட் 200 கிராம்
திராட்சை 200 கிராம்
தேன் அல்லது வெல்லம் 300 கிராம்
தேவையெனில் தேங்காய் பால்- சிறிது
தயாரிப்பு முறை:
திராட்சையைக் கழுவி அரைத்துக் ஜீஸ் எடுக்கவும். அன்னாசியை தோல் நீக்கி, சிறிதாக வெட்டி அரைத்து வடிகட்டவும் காரட் ஆப்பிளை நன்றாகக் கழுவி தோலுடன் சிறிதாக வெட்டி நீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும் வடிகட்டி சாறு எடுக்கவும் எல்லாவற்றையும் கலந்து அத்துடன் இனிப்பு சேர்த்தால் சத்து மிகுந்த காக்டெய்ல் ஜீஸ் - எனர்ஜெடிக் ஜீஸ் சுவைத்திடத் தயார்
பலன்கள்:
விட்டமின் 'பி' சத்துக்கள் மிகுந்து உள்ளது. ஆற்றல், பலம் தரும் சாறு கழிவுகள் வெளியேறும் இரத்தம் சுத்தியடையும் நீரழிவு அன்பர்கள் தவிர அனைவரும் அருந்தலாம். கண்ணாடி அணிந்த அன்பர்கள் அவசியம் அடிக்கடி சாப்பிட வேண்டும். தொய்வை குறைக்கும். தொடர்ந்து சாப்பிட புற்றுநோய் குறையும். மலக்கட்டு விலகும். நல்ல தெம்புதரும் எனர்ஜெடிக் பானம். சிறுவர்கள், பெரியவர்கள் விரும்பும் பானம். இது போல் பல பழச்சாறுகள் தயாரிக்கலாம். விஷேச வைபவங்களுக்கு ஏற்ற ஜீஸ்."
இதேபோல் mixing juices பல பழக்கலப்புப் பானங்கள் தயாரிக்கலாம்
ஆப்பிள் + காரட் பானம்,
அன்னாசி + திராட்சை பானம்,
பிளம்ஸ்+ ஆப்பிள் பானம்,
ஆரஞ்சு+ சாத்துக்குடி பானம்,
மாதுளை+ ஆப்பிள் பானம் சேர்த்து தயாரிக்கலாம்
இவைகளுடன் தேன் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் அருமையான எனர்ஜெடிக் பானங்களை ருசிக்கலாம்.