கமலா ஹாரிசுக்கு குவியும் ஆதரவு - பரபரப்பை ஏற்படுத்தும் தேர்தல் களம் !!
தேர்தல் களம்
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை முன்மொழிவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கருத்துக்கணிப்பு முடிவில் மக்கள் ஆதரவில் கமலா ஹாரிஸ் 49 சதவீதமும், டொனால்ட் ட்ரம்ப் 47 சதவிகிதமாக பதிவாகி இருக்கிறது.
மற்றொரு முன்னணி பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் கருத்து கணிப்பு முடிவில் ஜோ பைடன், கறுப்பின வாக்காளர்களில் 59 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுவார் என தெரிவித்து இருந்தது.
அதிபர் வேட்பாளர் மாற்றத்திற்கு பிறகு கமலா ஹாரிஸ் 69 சதவீத வாக்குகளை பெறுவார் என கணித்துள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு டொனால்ட் டிரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.