தேர்தல் பிரச்சாரம் மேடை சரிந்து விழுந்து மெக்சிகோவில் ஒன்பது பேர் பலி !!

தேர்தல் பிரச்சாரம் மேடை சரிந்து விழுந்து மெக்சிகோவில் ஒன்பது பேர் பலி !!

மெக்சிகோ

வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் அடுத்த மாதம் ஜூன் இரண்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்னும் சில நாட்கள் உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக அங்குள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நியூவோ லியோன் மாகாணம் சான் பெட்ரோ கார்சா, கார்சியா நகரில் மக்கள் இயக்க கட்டுப்பாடு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான கலந்து கொண்டனர். அப்போது அந்த கட்சியின் அதிபர் வேட்பாளர்ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய கொண்டிருந்த நிலையில் திடீர் பலத்த சூறாவளி காற்று வீசியது அடித்த காற்றில் பிரச்சாரம் மேடை ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறி எடுத்து ஓட்டம் படுத்தினார். இந்த விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபரடார் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதனால் காற்றால் மேடை சரிந்து விழும் காட்சி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags

Next Story