நேபாளத்திலும் எவரெஸ்ட், எம்டிஹெச் மசாலாவுக்கு தடை விதிப்பு !!

நேபாளத்திலும் எவரெஸ்ட், எம்டிஹெச் மசாலாவுக்கு தடை விதிப்பு !!

எவரெஸ்ட், எம்டிஹெச் மசாலாவுக்கு தடை 

சிங்கப்பூர் ஹாங்காங் நாடுகளை தொடர்ந்து நேபாள நாட்டிலும் எவரெஸ்ட் மற்றும் எம்டிஹெச் நிறுவனங்களின் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் முக்கியமான மசாலா நிறுவனங்களாக எவரெஸ்ட் மற்றும் எம் டி ஹெச் நிறுவனங்கள் உள்ளது. இவர்கள் இந்திய மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகின்றன.

இதற்கிடையே இந்த நிறுவனங்களின் மசாலாக்களில் அளவுக்கு அதிகமாக சில கெமிக்கல் இருப்பதாக சொல்லி சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் தடை விதித்து உத்தரவிட்டன. இந்த நிலையில் இப்போது நேபாளத்திலும் இந்த இரு நிறுவனங்களுக்கும் தடை விதித்து அந்நாட்டின் உணவு தர கட்டுப்பாட்டு துறை உத்தரவிட்டது.

எவரெஸ்ட் மற்றும் எம்டிஎச் ஆகிய இரண்டு இந்திய மசாலா பிராண்டுகளில் இறக்குமதி பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எத்திலின் ஆக்சைடு அளவு அதிகமாக இருப்பதால் இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நாட்டின் உணவு தர கட்டுப்பாட்டு துறையின் செய்தி தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா மஹர்ஜன் நேபாளத்தில் எவரெஸ்ட் மற்றும் எம்டிஎச் பிராண்ட் மசாலா பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டது. மசாலா பொருட்கள் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இந்த தடையை அறிவித்து விட்டோம் இந்த தடை இப்போது நேபாளத்தில் அமலில் இருக்கிறது.

Tags

Next Story