ஆப்கானிஸ்தானில் கனமழையினால் ஏற்ப்பட்ட வெள்ளம் - 50 பேர் பலி !!!

X
ஆப்கானிஸ்தான்
King 24x7 News Content (An) |11 May 2024 11:57 AM ISTஆப்கானிஸ்தானில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலியாகினர். காபுல், ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது.
அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக பல நகரங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டு பலர் வீடுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்ததாக ஆட்சி செய்யும் தலிபான் அரசு தெரிவி க்கப்பட்டுள்ளது.
மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு மீட்பு நடவடிக்கை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.
Next Story
