''நான் ஒரு ஏலியன்.. யாரும் நம்பவில்லை..!'' - எலான் மஸ்க்

நான் ஒரு ஏலியன்.. யாரும் நம்பவில்லை..! - எலான் மஸ்க்

எலான் மஸ்க்

விவா டெக் நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய எலான் மஸ்க், "நான் ஒரு ஏலியன்தான். ஆனால் யாரும் அதை நம்பவில்லை." என்று கூறியிருக்கிறார்.

பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கலந்துக்கொண்டார்.

அப்போது நிகழ்வின் தொகுப்பாளர், "நீங்கள் ஒரு வேற்றுகிரகவாசி என்று சிலர் நம்புகிறார்கள்"என்று கூறினார். அதற்கு சிரித்துக்கொண்டே எலன் மஸ்க், "ஆம்.. நான் வேற்றுகிரக வாசிதான். எப்போதாவது, வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரம் எனக்குக் கிடைத்தால், அதனை உடனே X தளத்தில் பதிவிடுவேன். மனிதர்கள் பல கிரகங்களில் வாழவேண்டும் என்பதே ஸ்பேஸ் எக்ஸ்சின் நீண்ட கால இலக்கு. ஒரு நிலையான பல கிரக நாகரிகமாக மாற வேண்டும். அவ்வாறு செய்வது சாத்தியமாகும்போது, பூமியின் வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும்." என்றார்.

உலகை ஆட்டிப்படைகத் தொடங்கியிருக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். பாரிஸில் நடந்த விவா டெக் ஸ்டார்ட் அப் நிகழ்ச்சியில் வெப்கேம் மூலம் பேசிய மஸ்க், செயற்கை நுண்ணறிவின் காரணமாக வருங்காலங்களில் நம்மில் யாருக்கும் வேலை இருக்காது என்றும் ஏஐ தொழில்நுட்பமே தனது மிகப்பெரிய பயம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story