அமெரிக்காவுடன் கைகோர்த்த இந்தியா! நாசாவுடன் இந்தியர்கள் விண்வெளி பயணம் !
சுபஹான்சு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அங்கீகாரம் பெற்ற ஆக்ஸியமுடன் (AXIOM) இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டு, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான இஸ்ரோ- நாசா கூட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் அங்கீகாரம் பெற்ற ஆக்ஸியமுடன் (AXIOM) இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், சுபஹான்சு சுக்லா மற்றும் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய இருவர், சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இவ்விருவரும், இந்தியர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயிற்சி எடுத்துவரும் குரூப் கேப்டன்களாக உள்ளனர். விண்வெளிக்கு பயணிக்கவுள்ள இவ்விருவருக்குமான பயிற்சிகள், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.