இஸ்ரேலுக்கு படையெடுக்கும் இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள்!
இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள்
இந்தியா-இஸ்ரேல் இடையேயான உடன்படிக்கையின் படி, ஒன்றிய அரசின் 'Skill India' திட்டம் மூலம் பயிற்சி பெற்ற 6000 இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு செல்ல உள்ளனர்.
இஸ்ரேலில் பணியாற்றி வந்த சுமார் 97 ஆயிரம் பாலஸ்தீன தொழிலாளர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரால் கணிசமாக குறைந்ததால், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க இஸ்ரேல் திட்டமித்திருந்தது.
அதன்படி, கடந்த ஏப்ரல் 2-ம் தேதி முதற்கட்டமாக 64 இந்திய தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இந்த மாத இறுதிக்குள் 1,500 தொழிலாளர்களை வரவழைக்க இஸ்ரேல் முடிவு செய்திருந்தது.
இந்த சூழலில், இஸ்ரேலுக்கு சுமார் 6000 இந்திய தொழிலாளர்கள் ஏப்ரல்-மே மாதங்களில் வரவழைக்கப்பட உள்ளதாக இஸ்ரேல் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் மேற்பார்வையின் கீழ், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.