லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் எச்சரிக்கை !!

லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் எச்சரிக்கை !!

லெபனான்

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ பலியானார். இந்நிலையில் லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு, இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஹிஜ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பௌத் சகர் தலைமை வகித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.இருதரப்பும் மோதிக் கொள்வதால் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இது தொடர்பான தகவல் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் இடம்பெற்றுள்ளது.

லெபானனில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அங்குள்ள இந்திய துதரகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பொதுவெளியில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும். அவசர தேவை எனில் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்துள்ளது.

Tags

Next Story