டிரம்பின் பிரசாரம் குறித்த இமெயில்கள் ஹேக் செய்த ஈரானிய ஹேக்கர்கள் - குற்றம் சாட்டிய டிரம்ப் !!

டிரம்பின் பிரசாரம் குறித்த இமெயில்கள் ஹேக் செய்த ஈரானிய ஹேக்கர்கள் - குற்றம் சாட்டிய டிரம்ப்  !!

டிரம்ப்

முன்னாள் அதிபர் டிரம்பின் பிரசாரம் குறித்த இமெயில்கள் ஹேக் செய்யப்பட்ட நிலையில் டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ஆண்டு நடக்க உள்ள அதிபர் தேர்தலில் சில வெளிநாட்டு ஏஜென்டுகளின் தலையீடு உள்ளது என்றும் ஈரான் நாட்டின் ராணுவ உளவு பிரிவில் இருந்து ஹேக்கிங் செய்யப்பட்ட இ மெயில்களில் இருந்து திருடப்பட்ட தகவல்களை அதிபர் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பு வகிக்கும் அதிகாரிக்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், டிரம்ப்பின் தேர்தல் பிரசார செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் சியுங் பேசுகையில், டிரம்பின் பிரசாரம் தொடர்பான தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதில் ஈரானிய ஹேக்கர்களுக்கு தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.

Tags

Next Story