விண்வெளி சுற்றுலாவை சீனா நிறுவனம் தொடங்குவதாக தகவல் !!!

விண்வெளி சுற்றுலாவை சீனா நிறுவனம் தொடங்குவதாக தகவல் !!!

விண்வெளி சுற்றுலா

விண்வெளி துறை சமீப காலமாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்நிலையில் விண்வெளி சுற்றுலாவை சீன நிறுவனம் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த நூற்றாண்டில் உருவான அற்புதமான கண்டுபிடிப்புகள் நிலவைத் தொடும் அளவிற்கு மனித சமூகத்தை உயர்த்தியுள்ளது.

மனிதர்கள் நிலவில் இறங்கி அங்கிருந்து மண்ணை பூமிக்கு கொண்டு வந்தனர். அதன் பின்னர் சூரிய குடும்பத்தில் உள்ள சில கோள்களின் விண்கலனை இறக்கி சாதனை படைத்துள்ளனர். இப்போது விண்வெளி துறையை மேலும் ஓரடி முன்னோக்கி நகர்த்தி இருக்கின்றனர்.

அதாவது இனி விண்வெளிக்கு யார் வேண்டுமானாலும் போகலாம் என்கின்ற நிலையை விண்வெளி சுற்றுலா மூலம் நாம் சாத்தியமாக இருக்கிறோம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி விர்ஜின் கேலக்டிக் என்னும் விண்வெளி சுற்றுலா நிறுவனம் முதன்முறையாக நாலு விஞ்ஞானிகள் உட்பட ஆறு பேரை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பத்திரமாக பூமிக்கு கொண்டு வந்தது சேர்த்தது.

75 நிமிடங்கள் கொண்ட இந்த பயணத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரை விண்வெளியில் இந்த ஆறு பெரும் பறந்திருக்கிறார்கள். அதன் பின்னர் ப்ளூ ஆரிஜின் நிறுவனமும் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் சென்று பத்திரமாக திரும்பி இருக்கிறது.

இதன் மூலம் பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டும் போக வேண்டும் என்பது கிடையாது. யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு சென்று திரும்பலாம் என்பதை இரண்டு நிறுவனங்களும் நிரூபித்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் அமெரிக்காவை சேர்ந்தவை இந்நிலையில் தற்போது இந்த துறையில் சீனாவும் நுழைந்திருக்கிறது.

சீன வகை விண்வெளி நிறுவனமான சிஏஎஸ் ஸ்பேஸ் தனது முதல் விண்வெளி சுற்றுலா வாகனத்தை 2027டூ 2028- ம் ஆண்டில் செலுத்தும் என்று தெரிகிறது. இந்த சுற்றுலா ராக்கெட்டில் நாலு ஜன்னல் கொண்டு இருக்கும் இதில் 7 பேர் வரை பயணிக்க முடியும் ஒவ்வொரு நூறு மணி நேரத்திற்கும் ஒரு ராக்கெட் சுற்றுலாவுக்கு ஏவப்படும்.

மொத்தம் பத்து ராக்கெட்டுகள் இருக்கின்றன. ஒரு பயணத்திற்கு ரூபாய் 3.46 கோடி வரை செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கடந்து 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிலையில் இது சீன அறிவியல் அகடமி உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story