எத்தியோப்பியாவில் நிலச்சரிவு - பெண்கள் உட்பட 229 பேர் பலி !!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவு - பெண்கள் உட்பட 229 பேர் பலி !!

நிலச்சரிவு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த திங்கட்கிழமை அன்று கனமழை பொழிந்தது. இதையடுத்து அங்கு நிலச்சரிவு ஏற்ப்பட்டது.இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக இருந்தது. இந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.தொடர்ந்து பலர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சேற்றில் சிக்கியவர்களில் 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா உள்ளது. வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 50 பேர் உயிரிழந்தனர்.

தெற்கு எத்தியோப்பியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதம் மழை காலமாக உள்ளது. அந்த நேரத்தில் இந்த பகுதியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து அரங்கேறி வருவதாக தெரிகிறது.எத்தியோப்பியாவில் நேரிட்டுள்ள மிக மோசமான இயற்கைப் பேரிடா் இது என்று கூறப்படுகிறது.

Tags

Next Story