மணிப்பூரில் பிராட்பேண்ட் இணைய சேவை மீதான தடை நீக்கம்!!

மணிப்பூரில் பிராட்பேண்ட் இணைய சேவை மீதான தடை நீக்கம்!!

manipur internet

மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்டு இருந்த பிராட்பேண்ட் இணைய சேவைகள் நிபந்தனையுடன் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறை காரணமாக கடந்த மூன்று நாட்களாக முடக்கப்பட்டு இருந்த பிராட்பேண்ட் இணைய சேவைகள் நிபந்தனையுடன் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சாமானிய மக்கள், சுகாதார வசதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அலுவலகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிராட்பேண்ட் சேவைகள் மட்டும் வழங்கப்படும் நிலையில், மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. வன்முறை அதிகரித்து வரும் நிலையில், நவம்பர் 16 ஆம் தேதி ஏழு மாவட்டங்களில் இணைய கட்டுப்பாடு குறித்த உத்தரவை நிர்வாகம் விதித்தது. இணையத் தடை காரணமாக முக்கிய அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் துன்பங்களைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு பிராட்பேண்ட் சேவைகளின் விஷயத்தில் இடைநீக்கத்தை நிபந்தனையுடன் நீக்கும் முடிவை எடுத்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. ஒரு சந்தாதாரர் அனுமதிக்கப்பட்ட இணைப்பைத் தவிர வேறு எந்த இணைப்பையும் ஏற்க மாட்டார், மேலும் வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட்கள் அனுமதிக்கப்படாது. மேலும் மொபைல் இணைய சேவைகள் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

Tags

Next Story