ரஷ்யாவில் ராணுவ சரக்கு விமானம் விபத்து!

ரஷ்யாவில் ராணுவ சரக்கு விமானம் விபத்து!

விமான விபத்து

ரஷ்யாவில் ராணுவ சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய ராணுவத்துக்குச் சொந்தமான ஐஐ-76 ரக விமானம் செவா்னி விமானதளத்திலிருந்து 8 விமானப் பணியாளா்கள் 7 பயணிகளுடன் நேற்று புறப்பட்டது. அப்போது அதன் என்ஜினில் தீப்பிடித்ததால் புறப்பட்ட சிறிது நேரத்தில் அது அருகிலுள்ள இவானொவோ விமானதளத்தின் ஓடுபாதையை நோக்கி செலுத்தப்பட்டது.

இவோனாவோ பகுதியில் இந்த ராணுவ சரக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது, என்ஜினில் தீப்பிடித்ததால், கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் 15 பேர் பயணம் செய்ததாகவும் ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தீப்பற்றி எரிந்தபடி, விமானம் கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Tags

Next Story