விமான சேவைகளில் புதிய கட்டுப்பாடுகள்!
விமான சேவை
சுற்றுச்சூழல் மாசடைவதால் பருவநிலை மாற்றங்கள் அதிகரிப்பதாக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் (Spain), ரெயில் மூலம் கடக்கக்கூடிய தூரங்களுக்கும் பொதுமக்கள் விமான சேவையை பயன்படுத்துவதை குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், பல தனியார் ஜெட் விமான சேவைகளும் பாதிக்கப்படலாம் என தெரிகிறது.
குறுகிய தூர உள்ளூர் விமான சேவைகள் இல்லாமல் நீண்ட தூர விமான சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த இயலாது என விமான போக்குவரத்து நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
Next Story