ஏவுகணை வீசி மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா!!

ஏவுகணை வீசி மீண்டும் சோதனை நடத்திய வடகொரியா!!

North Korea missiles

வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தனது அணுசக்தியை முழுமையாக தயார்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக வடகொரிய அதிபர் உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story