வடகொரிய அதிபர் அதிரடி.. 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

வடகொரிய அதிபர் அதிரடி.. 30 அதிகாரிகளுக்கு மரண தண்டனை!

கிம் ஜோங் உன் 

வடகொரியா மாகாணம் ஒன்றில் மொத்தமாக புரட்டிப் போட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4,000 பேர்கள் வரையில் பலியான சம்பவத்தில் ஜனாதிபதி கிம் ஜோங் உன் கடும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளார்.

வட கொரியாவில் மலைகளில் உள்ள காடுகள் அழிக்கப்படுவதால், வெள்ளம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்றும் அதன் கட்டமைப்பும் இயற்கை சீற்றங்களை அவ்வளவாக தாங்கக்கூடியதாக இல்லை என்றும் ஏற்கனவே ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். வடகொரியா: அதற்கேற்றவாறு, சமீபகாலமாகவே வடகொரியாவை கனமழையும், வெள்ளமும் புரட்டி போட்டு வருகிறது.. அதிலும் கடந்த ஜூலை மாதம் எதிர்பார்க்காத அளவுக்கு, பேய்மழை பெய்தது.. இதனால், வட கொரியாவின் சினுய்ஜு நகரத்திலும், சீனாவின் எல்லைக்கு அருகிலுள்ள பியாங்யான் மாகாணத்தின் உய்ஜு பகுதியிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இதனால், வடகொரிய அதிபர் கிம் ஜான் உன், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்கு ரப்பர் படகில் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.. கிட்டத்தட்ட 7 ஆயிரத்து 400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதை கண்டும், ஏராளமான வீடுகள், கட்டடங்கள், சாலைகள் அனைத்தையும் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததை கண்டும் வேதனையுற்றார். வெள்ள நீரில் வடகொரியா தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் எல்லாம் இணையத்தில் வெளியாகி, காண்போரை கலங்கடித்திருந்தது.

வெள்ள சேதம்: இதற்கு நடுவில், வடகொரியாவின் Chagang மாகாணத்தில், பெய்த கன மழை காரணமாக பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதால், 4,000 பேர்கள் வரையில் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.. வெள்ளத்தில் பலர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளை இழந்துள்ளனர்.. நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதையடுத்து, ஏற்றுக்கொள்ள முடியாத உயிரிழப்புகளை ஏற்படுத்தியவர்கள், கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று வடகொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில், 20 முதல் 30 அதிகாரிகள் வரையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Tags

Next Story