மோடிக்கு பாலஸ்தீன பிரதமர் கடிதம் - இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேல் காரணமா ?

மோடிக்கு பாலஸ்தீன பிரதமர் கடிதம் - இந்திய முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புக்கு இஸ்ரேல் காரணமா ?

பிரதமர் நரேந்திர மோடி 

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கடந்த 13ஆம் தேதி காசாவின் ராபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐநாவில் பணியாற்றி வந்த இந்தியாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வைபவ் அல் காலே உயிரிழந்தார். ஐநாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிறகு அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பாலஸ்தீனத்தின் பிரதமர் முகமது முஸ்தபாக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய முன்னாள் ராணுவ அதிகாரி உயிரிழந்ததற்கு இஸ்ரேலை காரணம் என்று தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஐநா பணியாளராக பணியாற்றி வந்த வைபவ் அல் காலே இந்திய ராணுவ அதிகாரி இஸ்ரேலியர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது துரதிஷ்டவசமானது அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கொள்கிறேன். இந்த அதிகாரியின் இறப்புக்கு இஸ்ரேலின் தாக்குதல் தான் காரணம் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி மீதான தாக்குதல் காசாவில் உள்ள மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படைகளால் நிகழ்த்தப்பட்ட பரந்த இனப்படுகொலை ,போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களின் ஒரு பகுதியாகும், பாலஸ்தீனியர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை நிலை நிறுத்துவதற்காக உங்கள் அர்ப்பணிப்பு பிராந்தியத்தில் நீதி மற்றும் அமைதிக்கான எங்கள் தற்போதைய போராட்டத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story