அமெரிக்க F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
F-16 ரக போர் விமானம்
அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை ரஷ்ய (Russia) ஏவுகணை தாக்குதலில் இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ரஷ்ய உக்ரைன் (Ukraine) மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த திங்கட்கிழமையளவில் கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகின்றது.
ரஷ்யா நூற்றாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அப்போது எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார். இந்த விமானம் அமெரிக்காவால் (USA) தயாரிக்கப்பட்டதுடன் F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கியுள்ளதுடன் இது சமீபத்தில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy ) செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, நேட்டோ (NATO) படைகள் சுமார் 65 எஃப் -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தன.
எஃப்-16 ரக போர் விமானங்கள் தவிர, பேட்ரியாட் மற்றும் நாசா ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உக்ரைனிடம் உள்ளன. எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.