`பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

`பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

ரஷ்ய அதிபர் புதின் 

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அப்போது கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதினை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது அதிபர் புதின் கூறியதாவது: ''உக்ரைன் விஷயத்தில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து பிரதமர்மோடியுடன் பேசினேன். இப்பிரச்சினையை அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார். எங்களின் அன்புக்குரிய நண்பர் பிரதமர் மோடிரஷ்யா வந்தால் நாங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியடைவோம். இருதரப்பு உறவு, உலக விஷயங்கள் குறித்து நம்மால் ஆலோசிக்க முடியும். நாங்கள் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம் என்பதை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.'' என்று கூறினார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். எந்த அரசியல் அணி ஆட்சிக்கு வந்தாலும், நமது நாடுகள் இடையேயான பாரம்பரிய நட்பு எப்போதும் நிலைத்து நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story