காசா மீது தாக்குதலை நடத்தும் இஸ்ரேலுக்கு ஐநா கண்டனம் !!
காசா
இஸ்ரேல்-காசா இடையே கடந்த அக்டோபர் 7-ந் தேதி போர் தொடங்கியது. 7 மாதங்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம்தெரியாத அளவிற்கு அழித்து விட்டது.
இதற்கிடையே கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.இதற்கிடையே, நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 23 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குட்டரெஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளத்தில், இந்தக் கொடிய மோதலில் இருந்து தஞ்சம் தேடிவந்த ஏராளமான அப்பாவி பொதுமக்களை கொன்ற இஸ்ரேலின் நடவடிக்கைகளை நான் கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் இல்லை. இந்தக் கொடூர தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார்.