விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்!

விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல்!

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாக உள்ளது. மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் மீது ஜூன் 24-ம் தேதி பரிசீலனை செய்யப்பட உள்ளதாகவும் மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26-ம் தேதி கடைசிநாள் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags

Next Story