வங்களாதேசம் வன்முறை - நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையால் பரபரப்பு !!

வங்களாதேசம் வன்முறை - நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையால் பரபரப்பு !!

ஹேக்கர்

வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்ற உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடம் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்த நிலையில் மாணவர்கள் போராட்டம் காரணமாக கடந்த 2018 இல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் பாரபட்சமாக இருக்கிறது என கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் ஆவார். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறை காரணமாக வங்காளதேச அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. மக்கள் வீட்டுக்குள்ளே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இனிய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு பணிகளுக்காகவும் ராணுவம் கவனம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்திற்கு காரணமான 30 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு முப்பது சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த இணையதளங்களில்,'ஆப்ரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள்' என்றும் 'இது இனிமேல் போராட்டம் அல்ல போர்' என்றும் சிவப்பு எழுத்துக்களால் ஹேக்கர்கள் மேற்கோள் காட்டிய வாசகங்கள் திரையில் வருகின்றன.

ஹேக்கர்கள் விடுத்துள்ள பிரகடனத்தில், 'திறன் மிக்க மாணவர்களால் அமைதியான வழியில் நடந்தப்பட்ட போராட்டத்தை அரசு மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து வன்முமுறையாலும் கொலைகளாலும் ஒடுக்க முயன்றுள்ளது. இனி இது வெறும் போராட்டம் இல்லை. நீதிக்கான, சுதந்திரத்துக்கான, எதிர்காலத்துக்கான போர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

மற்ற ஹேக்கர்கள், பத்திரிகையாளர்கள், இன்டலிஜென்ஸ் நிபுணர்கள் எண்களின் இந்த முன்னெடுப்பில் சேர வேண்டும், உங்களிடம் உள்ள திறனும், தழுவலும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு தேவை. வேடிக்கை பார்ப்பதற்கான காலம் முடிந்துவிட்டது' என்றும் "THE R3SISTANC3" கும்பல் ஹேக்கர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹேக்கர்களின் அந்த பிரகடனத்தில் இடம்பெற்ற புகைப்படங்களில், இரண்டு நாயுடன் அடையாளம் தெரியாத 5 நபர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story