"3ஆம் உலகப் போர் வெடிக்கும்.." புதின் எச்சரிக்கை!

3ஆம் உலகப் போர் வெடிக்கும்..  புதின் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபர் புதின்

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நிலவி வரும் நிலையில் ஐந்தாவது முறையாக ஆட்சி அமைத்த அதிபர் புதின் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவின் நோட்டா கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையே நிலவும் போர் காரணமாக மேற்குலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவை வன்மையாக கண்டித்து வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் ஐந்தாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். ஆட்சி அமைத்த உடனே அவர் அறிவித்த எச்சரிக்கை அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ஆனால் ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நோட்டா ராணுவ கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால் அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

தற்போது அதிபர் புதிய கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story